கிருஷ்ணராயபுரம், மே 14: பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட லட்சுமணம்பட்டியில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமணம்பட்டியில் பொது சுகாதாரம் மாவட்ட துணை இயக்குனர் (காச நோய்) டாக்டர் சரவணன் வழிகாட்டுதலின்படி காசநோய் தொடர்பான 100 நாட்கள் காசநோய் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகன முகாம் நடைபெற்றது.
முகாமில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சுந்தரராஜன், காசநோய் அறிகுறிகள், பரவும் தன்மை, சிகிச்சை முறைகள், அரசு வழங்கும் உதவித்தொகை தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். மேலும் முகாமில் 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு காசநோயை கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. மேற்கண்ட முகாமில் மீனாட்சி விஹச்என் அனிதா எம்எல்ஹச்பி, முத்துமணி டபிள்யூஹச்வி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
