கருர் மாரியம்மன் கோயில் விழா அமராவதி ஆற்றில் முட்செடிகள் அகற்றும் பணி மும்முரம்

கரூர், மே 16: கருர் மாரியம்மன் கோயில் விழாவினை முன்னிட்டு பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள முட்செடிகள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி விழாவுக்கான கம்பம் நடும் விழா கடந்த 10ம்தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே 27ம்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் கரூர் அமராவதி ஆற்றில் வான வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமராவதி ஆற்றுக்கு வந்து செல்வார்கள். இதனடிப்படையில், கடந்த இரண்டு நாட்களாக கரூர் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் அதிகளவு படர்ந்துள்ள சீத்த முட்செடிகள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தின் வழியாக பயணிக்கும் அமராவதி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் முட்செடிகள் அதிகளவு படர்ந்துள்ளன. எனவே, அனைத்து பகுதிகளிலும் இந்த முட்செடிகளை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவ ரும் எதிர்பார்க்கினற்னர்.

 

Related Stories: