×

69 ஆண்டுகளில் முதல் முறையாக தேசிய கிரிக்கெட் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள்

 

சென்னை, மே 20: தேசிய அளிவில் நடந்த 69வது கிரிக்கெட் போட்டியில் தமிழக மாணவ-மாணவியர் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவர்களுக்கான 69வது தேசிய அளவிலான 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 1ம் தேதி வரையில் தெலங்கானவில் நடந்தது. அதில் 32 அணிகள் போட்டியில் பங்கேற்றன.

தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி டெல்லி அணியுடன் விளையாடி 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. தேசிய அளவிலான 69 வருடத்தில் முதல் முறையாக வெள்ளிப் பதக்கம் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து தமிழக மாணவர்கள் வலராறு படைத்துள்ளனர். மேலும், 14, 17 மற்றும் 19 வயதுப் பிரிவில் மாணவ-மாணவியர் 46 வகையான விளையாட்டு போட்டிகளில் சிறந்த மாணவ மாணவியரை தேர்வு செய்து தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.

Tags : Chennai ,match ,Department of School Education ,69th National Level Under-17 Cricket Tournament for Students ,
× RELATED பல்லாவரம் ஏரியில் மருத்துவ கழிவுகள்...