×

பராமரிப்பு பணி நடப்பதே மின்வெட்டுக்கு காரணம்: அமைச்சர் விளக்கம்

 

சென்னை: மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: மின்வெட்டு காரணமாக மக்களின் புகார்களை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். மேலும், மின் வயர்கள் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இதில் தவறுகள் ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மின் துறையில் பணியாளர்கள் குறைபாடு உள்ளது. அதேபோல், 160க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு காரணங்களால் தோண்டப்பட்ட குழிகள் காரணமாக மின் கம்பிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் சரிசெய்யப்பட்டு வருகின்றன. மேலும், அதிக மின் தேவை இருக்கும் நேரங்களில் சுழற்சி முறையில் மின் விநியோகம் சீரமைக்கப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவையும் சரிசெய்யப்பட்டு வருகின்றன. மின்வெட்டு ஏற்படும்பட்சத்தில் மின்னகம் மூலம் தொடர்பு கொள்ளலாம். அதேபோல், சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்படும் புகார்களும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. அரசுக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை என்றார்.

Tags : Chennai ,Power Minister ,Nirmal Kumar ,
× RELATED ஏற்காட்டில் 49வது கோடை விழா; நாளை மலர் கண்காட்சி துவக்கம்