- உயர் நீதிமன்றம்
- செயலாளர்
- துறை
- அறக்கட்டளைகள்
- திருப்பரங்குன்றம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- அறநிலையத்துறை
- அமைச்சர்
- நிர்மல் குமார்
- திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மதுரை…
சென்னை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோயிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்துக்காக நடை தாமதமாக சாத்தப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோயிலில் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் கடந்த 15ம் தேதி தரிசனம் செய்தார். வழக்கமாக கோயில் நடை மதியம் 12.45 மணிக்கு சாத்தப்படும். ஆனால் அமைச்சருக்காக கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது.
அமைச்சரின் தரிசனத்துக்கு பிறகே கோயில் நடை சாத்தப்பட்டது. அதேபோல, கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் கோயிலில் நடந்த விவகாரம் குறித்து நீதிபதிகள், அமைச்சர் கோயிலுக்கு சென்றபோது என்ன நடந்தது என்பது குறித்து அறநிலையத்துறை செயலாளர் அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
