மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதுவை தொழிலதிபர்கள் திமுகவில் ஐக்கியம்

புதுச்சேரி,  மார்ச் 3: தமிழகம் மட்டுமின்றி புதுவையிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆசிபெற்ற அரசு அமைய தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ பல்வேறு  நடவடிக்கை எடுத்து வருகிறார். திமுக கொள்கை மீது பற்றுள்ளவர்களை அடையாளம்  கண்டு கட்சியில் இணைத்து வருகின்றார். புதுச்சேரி  தொழிலதிபர்களான அவ்வையார் இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் கார்த்திகேயன்  மற்றும் முருகையன், வளத்தியன், அப்துல்காதர், அந்தோணி, வாசு ஆகியோரை சென்னை  அழைத்துச் சென்ற சிவா எம்எல்ஏ, அவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் நேற்று முன்தினம் திமுகவில் இணைத்தார்.  இந்நிகழ்ச்சியின்போது பொது செயலாளர் துரைமுருகன், புதுச்சேரி இளைஞரணி  அமைப்பாளர் முகமது யூனூஸ், தொகுதி செயலாளர் சக்திவேல், பொருளாளர்  செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>