பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சில்லென்று ஒரு வெற்றி; சிஞ்சா கிராஸ் அபாரம்

 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று, ஆஸ்திரியா வீராங்கனை சிஞ்சா கிராஸ் அபார வெற்றி பெற்றார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் தகுதிச் சுற்றுப் போட்டி ஒன்றில் ஆஸ்திரியா வீராங்கனை சிஞ்சா கிராஸ், ஜெர்மனி வீராங்கனை அன்னா லெனா பிரீட்ஸம் உடன் மோதினார். துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகள் குவித்த சிஞ்சா கிராஸ், முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய அவர் 2வது செட்டையும், 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார்.

அதனால், 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு தகுதிச் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ஸ்பெயின் வீராங்கனை லெய்ர் ரொமேரா கோர்மாஸ் மோதினர். இப்போட்டியின் முதல் செட்டை, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கோர்மாஸ் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கிலும், 3வது செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கிலும் ஸ்லோன் வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய ஸ்லோன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: