×

தென்மேற்கு பருவமழையை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக கேரளா செல்லும் தேசிய பேரிடர் மீட்பு படை.!

அரக்கோணம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் (NDRF) 8 குழுக்களை கேரளாவிற்கு விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (KSDMA) கோரிக்கையைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 8 குழுக்கள் (மொத்தம் 240 வீரர்கள்) கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். NDRF செயல்பாடுகளின் துணைத் தளபதி பிரவீன் எஸ்.பிரசாத் இதுகுறித்து பேசுகையில், “பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாலும், கேரளாவின் வேண்டுகோளுக்கு இணங்கவும், என்.டி.ஆர்.எஃப் பட்டாலியன்களில் இருந்து எட்டு மீட்புக் குழுக்கள் கேரளவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருப்பார்கள். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள ரப்பர் படகுகள், மரம் அறுக்கும் கருவிகள் மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் இவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து 24 மணி நேரமும் நிலைமை கண்காணிக்கப்படும். தவிர ஊட்டி, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய வகையில், தமிழ்நாட்டிலும் நான்கு மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதுதவிர, சென்னை மற்றும் அந்தமான் தீவுகளிலும் நாங்கள் மீட்புக் குழுக்களைப் பணியில் அமர்த்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Tags : National Disaster Rescue Force ,Kerala ,Arakkonam ,NDRF ,Kerala State Disaster Management Commission ,KSDMA ,
× RELATED டெட்ரா பேக், பெட் பாட்டில்களில் மது விற்பனை: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்