×

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மே.20) 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெம்ரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னையில் காலை முதலே வெயில் கோரமாக வாட்டி வதைத்த நிலையில் மாலையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், குளுமையான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் அதேபோன்று லட்சத்தீவு பகுதிகளில் இருந்து தெற்கு கடலோர ஆந்திரா வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதேநேரம் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Puducherry ,Coimbatore ,Nilgiris… ,
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு...