×

மேட்டுப்பாளையம் அருகே குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையத்தில் கடந்த மாதம் தாயை பிரிந்து தவித்து வந்த குட்டி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குட்டி யானை கடந்த மாதம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள லிங்கபுரம் கிராமத்தில் தாயை பிரிந்து வனப்பகுதியில் இருந்து வெளியேறி பொது மக்கள் இருக்க கூடிய பகுதியில் சுற்றி திரிந்திருக்கிறது.

இது தொடர்பான தகவல் கிடைத்து வனத்துறையினர் உடனடியாக அங்கு சென்று குட்டி யானையை மீட்டனர். மீட்ட அந்த குட்டி யானையை அதன் தாயுடன் உடனடியாக சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் பல்வேறு கட்ட முயற்சி எடுத்தும், ட்ரோன் மூலமாக தாய் யானையை தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல வேறு 2 இடங்களில் அந்த யானை குட்டியை சேர்க்கும் முயற்சி எடுத்த போதும் அதுவும் தோல்வியில் முடிந்த காரணத்தினால் வனப்பகுதிக்கு அந்த குட்டி யானையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரியின் ஆலோசனையின் பேரில் சிறுமுகை பகுதியில் தொடங்கப்பட்டிருக்க கூடிய வன விலங்கு சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையத்தில் வைத்து அந்த யானை குட்டியை பராமரிக்க முடிவெடுக்கப்பட்டது. பராமரிப்பின் போது அந்த குட்டி யானை ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

தற்போது தொடர்ந்து அந்த குட்டி யானையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்கவும் அதேபோல அதற்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

 

Tags : Matuppalayam ,Mathupalayam ,Urinka ,Lingapuram ,
× RELATED பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில்...