சென்னை: பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
“10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 94.31% ஆக உயர்ந்துள்ளது! (கடந்தாண்டை விட 0.51% அதிகம்!)
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் திராவிடமாடல் ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். கடந்த ஐந்தாண்டுகளில் போடப்பட்ட அடித்தளத்தால் இனி ஆண்டுதோறும் அதிகரிக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. இந்நேரத்தில் மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தேர்ச்சிப் பெற தவறியுள்ள அன்பு மாணவச் செல்வங்கள் ஜூலை 8ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ள துணைத் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கும் Advance வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
