×

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்: பாமக தலைவர் அன்புமணி

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். தோல்வியடைந்த செல்வங்கள் தளராமல் முயன்று வெல்ல வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் 94.31% மாணவச் செல்வங்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்காகவும், சிறந்த முறையில் மேல்நிலை மற்றும் தொழிற் பயிற்சி கற்பதற்காகவும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.51% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு நான் சொல்லவிரும்பும் அறிவுரை என்னவென்றால், மனம் தளர்ந்து விடாதீர்கள் என்பது தான். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று மேல்நிலைக்கல்வியை தொடர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : 10th grade general election ,Pamaka ,Anbumani ,Chennai ,grade general elections ,Bhamaka ,Tamil Nadu ,
× RELATED பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில்...