- ராஜஸ்தான் ராயல்ஸ்
- லக்னோ
- ஜெய்ப்பூர்
- 19 வது ஐபிஎல்
- ராயல் சேலஞ்சர்ஸ்
- பெங்களூர்
- சன்ரைஸ் ஹைதராபாத்
- குஜராத் டைட்டன்ஸ்
- பஞ்சாப்
- ராஜஸ்தான்
- சென்னை
ஜெயிப்பூர்: 19வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன. 4வது இடத்தை பிடிக்க பஞ்சாப், ராஜஸ்தான், சென்னை, கொல்கத்தா, டெல்லி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில் பஞ்சாப், சென்னை, டெல்லி ஆகிய அணிகள் எஞ்சி உள்ள ஒரு போட்டியில் வென்றால் மட்டுமே வாய்ப்பு உள்ளது. அதுவும் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே 4வது இடத்துக்கு முன்னேற போவது யார் என்று தெரியும். ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணி மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இருப்பினும், பிளே ஆப் சுற்றுக்கு இன்னும் ஒரு அணி மட்டுமே தகுதி பெற வேண்டும் என்பதால் ரன் ரேட் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், நேற்றிரவு ஜெயிப்பூரில் நடந்த 64வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ அணியில் துவக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், ஜோஸ் இங்லீஸ் ஆகியோர் களமிறங்கினர். துவக்க முதலே இருவரும் ராஜஸ்தான் பந்து வீச்சை நாலா புறமும் சிதறவிட்டனர். அதிரடியாக விளையாடி ஜோஸ் இங்லீஸ் 60 ரன் (29 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்திருந்த நிலையில், கிளீன் போல்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த நிக்லோஸ் பூரான் 16 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷுடன் ஜோடி ரன் வேட்டையில் ஈடுபட்டார். ரிஷப் பண்ட் 35 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார். சிறப்பாக ஆடிய மிட்ச்செல் மார்ஷ் 96 ரன் (57 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்திருந்தபோது, கடைசி பந்துக்கு முன் பந்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் யாஷ் புஞ்சா 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் விளையாடிய ராஜஸ்தான் 16 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்திருந்தது. அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 93 ரன் (38 பந்து, 7 பவுண்டரி, 10 சிக்சர்) அடித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 225 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி அபார வெற்றிப் பெற்றது.
* மீண்டும் முதலிடம் கிளாசனுக்கு ஆரஞ்சு தொப்பி
சென்னைக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் வீரர் ஹென்ரிச் கிளாசன் 47 ரன் எடுத்தார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்து மீண்டும் ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தி உள்ளார். இவர் 13 ஆட்டங்களில் 555 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் குஜராத் அணியின் சாய் சுதரன் 554 ரன்னும், 3வது இடத்தில் சுப்மன் கில் 552 ரன்னும் குவித்து உள்ளனர்.
