×

ஆப்கானுக்கு எதிரான தொடர் இந்திய அணி அறிவிப்பு: மானவ் சுதார், குர்னூர் பிரார், பிரின்ஸ் யாதவ் அறிமுகம்

 

மும்பை: ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போடிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சுப்மன் கில் தலைமையிலான டெஸ்ட் அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், தேவ்தத் படிக்கல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜூரெல். இதில் மானவ் சுதார், குர்னூர் பிரார் ஆகியோர் இந்தியா அணியில் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.

சுப்மன் கில் தலைமையிலான ஒருநாள் போட்டி அணியில் ரோக்த் சர்மா, விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஷர்ஷ் துபே. இதில் பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் ஆகியோர் இந்திய அணியில் அறிமுகம் வீரர்களாக இடம்பெறுள்ளனர்.

Tags : India squad ,Afghanistan ,Manav Sudar ,Gurnoor Brar ,Prince Yadav ,Mumbai ,India ,Indian squad ,Shubman Gill ,KL ,Rahul ,
× RELATED ஐபிஎல் 2026: லக்னோ அணிக்கு எதிரான...