×

காமன்வெல்த் செஸ் சங்க தலைவராக பரத்சிங் தேர்வு

 

புதுடெல்லி: இலங்கையின் வசகடுவா நகரில் நடந்த காமன்வெல்த் செஸ் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடந்த தேர்தலில், விளையாட்டுத்துறையில் சிறப்பு வாய்ந்த நிர்வாகியாக கருதப்படும் பரத் சிங் சவுகானை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்பதவியை, 4 ஆண்டுகள் அவர் வகிப்பார்.

இதுகுறித்து சிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தொலைநோக்கு பார்வையுடன் கூடிய சவுகானின் தலைமையின் மீது எல்லோரும் வைத்துள்ள நம்பிக்கையால், அவர் மீண்டும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Bharat Singh ,President ,Commonwealth Chess Association ,New Delhi ,Wasagaduwa, Sri Lanka ,Bharat Singh Chauhan ,
× RELATED ஐபிஎல் 2026: சென்னை அணியை 5 விக்கெட்டுகள்...