×

சலீமா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு: 26ம் தேதி பெர்த் நகரில் முதல் போட்டிசலீமா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு: 26ம் தேதி பெர்த் நகரில் முதல் போட்டி

 

பெர்த்: ஆஸ்திரேலியாவில் நடக்கும் 4 ஹாக்கி போட்டிகளில் மோதும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் பட்டியலை ஹாக்கி இந்தியா நேற்று வெளியிட்டுள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் வரும் ஜூன் 15-21 தேதிகளில் எப்ஐஎச் ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கு முன்னதாக, வரும் 26-30 தேதிகளில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆஸி மகளிர் ஹாக்கி அணியுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணி 4 போட்டிகளில் ஆடவுள்ளது. இதில் இடம்பெறும் வீராங்கனைகளின் பட்டியலை ஹாக்கி இந்தியா நேற்று வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்திய மகளிர் அணி கேப்டனாக சலீமா டெடெ அறிவிக்கப்பட்டுள்ளார்.

தவிர, இந்திய அணியில் அனுபவம் மிக்க வீராங்கனைகளான சவீதா, சுஷிலா சானு புக்ராம்பம், லால்ரெம்ஸியாமி, நவ்நீத் கவுர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கோல் கீப்பர்களாக சவீதா, பிச்சு தேவி கரீபாம் செயல்படுவர். தடுப்பாட்ட வீராங்கனைகளாக நிக்கி பிரதான், இஷிகா சவுத்ரி, சுஷிலா, லால்தன்லுவாங்கி, ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்கள வீராங்கனைகளாக, நவ்நீத் கவுர், பல்ஜித் கவுர், தீபிகா, அன்னு, ஹினா பனோ, ருதுஜா டடாஸோ பிஸால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Salima ,Perth ,Hockey India ,Australia ,FIH Hockey Women's Nations Cup ,Auckland, New Zealand ,
× RELATED ஐபிஎல் 2026: சென்னை அணியை 5 விக்கெட்டுகள்...