சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு, நேற்றுமுன்தினம் இரவு 8.25 மணிக்கு, மும்பையில் இருந்து, வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், அதேபோல் சென்னையில் இருந்து, இரவு 9.05 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குவைத்தில் இருந்து, நேற்று அதிகாலை 2.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வரவேண்டிய குவைத் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 3.25 மணிக்கு, சென்னையில் இருந்து குவைத் செல்ல வேண்டிய குவைத் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு காரணம், போதிய பயணிகள் இல்லாதது தான் என்று கூறப்படுகிறது. அதோடு சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு 8 மணியிலிருந்து நேற்று அதிகாலை வரை 12 விமானங்கள், சுமார், 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
