×

வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல்: திமுக கடும் கண்டனம்

 

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை திமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். ஊடகங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்க வேண்டும் என்பதுடன், பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட விடாமல், அச்சுறுத்தி அவர்களின் எழுத்துரிமை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுவதை திமுக என்றைக்கும் ஏற்றதில்லை.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது புதிய அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து அதன் மூலம் தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணிகாத்திடுவது அரசின் கடமை என்பது உணர்ந்து, முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல்மீது புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Chennai ,Organizing Secretary ,R.S. Bharathi ,Haja Mukaidin ,Muthupettai, Tiruvarur district ,
× RELATED 23 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில்...