வேலூர், மே 18: 2026-2027ம் ஆண்டிற்கான அனைத்து மருத்துவக்கல்லூரிகளும் வருடாந்திர ஆண்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஒவ்வொரு வருடமும் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். 2026-27ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. இதனிடையே 2026-27ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ் இடங்களின் வருடாந்திர புதுப்பித்தல் விண்ணப்பங்களை செயலாக்குவதற்காக, வருடாந்திர ஆண்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவக்கல்லூரிகளுக்கு என்எம்சி உத்தரவிட்டுள்ளது.
