வேலூர் மாவட்டத்தில் தேர்தலுக்காக சீல் வைத்த எம்எல்ஏ அலுவலகங்கள் மீண்டும் திறப்பு

வேலூர், மே 12: வேலூர் மாவட்டத்தில் தேர்தலுக்காக சீல் வைக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 15ம் தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகம், மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இதற்கிடையில், கடந்த 4ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டன. இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதி மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் அலுவலகங்களை சீல் அகற்றும் பணிகள் தொடங்கியது. அதன்படி, வேலூர், காட்பாடி எம்எல்ஏ அலுவலகங்களை பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் நேற்று அகற்றப்பட்டது. தொடர்ந்து, புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏவிடம், அலுவலகத்திற்கான சாவி வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: