கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் ஆடுகளின் விற்பனை அமோகம்: வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி

 

 

கே.வி.குப்பம், மே 19: கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடந்ததால், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கே.வி.குப்பத்தில் திங்கள் தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். மாவட்டத்தில் பிரபலமான ஆட்டு சந்தைகளுள் ஒன்றான இந்த ஆட்டுச்சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களில் சந்தைகள் களைகட்டும். புரட்டாசி மாதம், உட்பட சில நாட்களில் நடைபெறும் சந்தைகள், மந்தமாகவே இருக்கும். தொடர்ந்து சில நாட்களில், மந்தம், களைகட்டுவது என்று மாறி மாறி சந்தைகள் நடைபெறும்.

இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று காலை வழக்கம்போல் ஆட்டு சந்தை கூடியது. இதில் கே.வி.குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும், நூற்றுக்கணக்கான ஆடுகள், இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகள், வளர்பதற்காக வாங்கும் ஆடுகள் என ஆடுகளை ஜோடி, ஜோடியாகவும் வாங்குபவர்கள் என பல்வேறு கிராமங்களில் இருந்து வந்தனர்.

மேலும், வரும் 28ம் தேதி பக்ரீத் பண்டிகை வருதால், நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆடுகளின் விற்பனை அமோகமாக விற்பனையானது. இதனால், ஆடுகளை விற்க வந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து ஆடுகள் விற்க, வாங்க வந்த வியாபாரிகள் நிற்பதற்கு இடம் கூட இல்லாத வண்ணம், இருந்தது. அதேபோல், அடுத்த திங்கட்கிழமையும், ஆட்டு சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Stories: