வேலூர், மே 18: 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலால் நெடுந்தூரம் பயணம் செய்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அரசு ஏசி பஸ்கள் கூடுதலாக இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை கடந்த 3ம் தேதி 109 டிகிரியாக வெயில் பதிவானது. பகல் நேரங்களில் காணப்படும் அதிகளவிலான அனலால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் உடல் குளிர்ச்சி தரும் இளநீர், நுங்கு, பழச்சாறு, கூழ் உள்ளிட்ட நீராதார உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர்.
