ஆட்டோ டிரைவர் பலி மனைவி கண்முன் பரிதாபம்

 

வேலூர், மே 18: வேலூரில் மனைவி கண்முன் கல்குவாரியில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் அடுத்த அடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(31), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜோதிலட்சுமி. தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜ்குமார், ஜோதிலட்சுமி மற்றும் சிலருடன் சித்தேரியில் உள்ள கல்குவாரியில் துணிகளை துவைக்க சென்றுள்ளனர். அப்போது, ராஜ்குமார் கல்குவாரியில் குதித்துள்ளார். நீண்ட நேராமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த ஜோதிலட்சுமி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் நீரில் மூழ்கி ராஜ்குமாரை தேடியும் கிடைக்கவில்லை.

Related Stories: