ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் சஞ்சனாவுக்கு வெண்கலம்: 77 கிலோ பிரிவில் சீனாவுக்கு தங்கம்

காந்திநகர்: ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் மகளிர் 77 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சனா வெண்கலப்பதக்கம் வென்றார். குஜராத் மாநிலம் காந்திநகரில் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் 77 கிலோ எடைப்பிரிவு போட்டியில் சீன வீராங்கனை குய்பாங் லியாவோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 265 கிலோ (118+147 கிலோ) எடை தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

தென் கொரியா வீராங்கனை 260 கிலோ எடை தூக்கி 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்திய வீராங்கனை சஞ்சனா, 220 கிலோ எடை தூக்கி 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இத்துடன் சேர்த்து, ஆசிய பளுதூக்குதல் போட்டிகளில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இதற்கு முன், இந்தியாவின் கோமல் கோஹர் (48 கிலோ), ஞானேஸ்வரி யாதவ் (53 கிலோ), அஜித் நாராயணா (71 கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: