அகில இந்திய தொழிற் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சை, மார்ச் 2: தஞ்சையில் வரும் ஜூலை மாதம் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின்கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமம் சார்பில் அகில இந்திய தொழிற் தேர்வு நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2018ம் ஆண்டுக்கு முன் எஸ்.சி.வி.டி சேர்க்கை பெற்ற தொழிற்பிரிவு பயிற்சியாளர்கள், தொழில் பழகுனர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் அரசு உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பம் சமர்பிக்கும் நாளில் 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை. தனித் தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் www.skilltrainingtn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>