முக்கூடலில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த டிரைவர் ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!!

நெல்லை: முக்கூடலில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த டிரைவர் ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2018ம் ஆண்டு இரவு நேரத்தில் ஆட்டோவில் வந்த சிறுமிக்கு ராமச்சந்திரன் பாலியல் தொல்லை அளித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் டிரைவர் ராமச்சந்திரன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: