சென்னை: டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸுக்கான விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
