ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரில் அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்தில் இருந்து புகை வெளியேறி, திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர். பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
