- AIADMK எம்.எல்.ஏக்கள்
- எம்.ஜி.ஆர்
- ஜெயலலிதா
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- தாவேகா அரசாங்கம்
- தவேகா…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க கோரியிருந்தோம்.ஆனால் ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் அதிமுகவுக்கு துரோகம் செய்துள்ளார்கள். தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது தவறானது, சட்டத்திற்கு புறம்பானது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்நேரத்தில் என்னை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சிலர் ஆசை வார்த்தை கூறி புதிய அரசில் பதவி பெற வேண்டும் என முடிவு எடுத்துள்ளார்கள். 6 அமைச்சர், 10 வாரிய தலைவர் பதவி கொடுப்பதாக பேரம் பேசப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா சாதனையை மக்களிடம் சொல்லி வாக்கு பெற்றோம். அந்த தலைவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் இன்று துரோகம் செய்துள்ளார்கள். இது அதிமுகவில் மட்டும் நடப்பது இல்லை. மாறி மாறி ஆட்சிகள் வரும். இன்று தவெக வெற்றி பெற்றுள்ளது 47 தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது சாதனை அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என ஆசைப்பட்டு இந்த நிலைபாட்டில் உள்ளார்கள். இது சட்டத்திற்கும் நீதிக்கும் புறமானது. தூய்மையான ஆட்சி நடைபெற வேண்டுமென்றால் அனைத்திலும் இருக்க வேண்டும்.
எல்லா இயக்கத்திலும் இந்த சூழ்நிலை வரும். இன்று எங்களுக்கு சோதனை வந்துள்ளது. தவறான பாதையில் முதல்வர் சென்று கொண்டிருக்கிறார். குதிரை பேரம் நடந்துள்ளதாக பேசப்பட்டு உள்ளது. தூய்மையான ஆட்சியை கொடுக்கிறோம் என்று இப்படி செய்கிறார்கள் என்றால் மக்கள் தான் சிந்திக்க வேண்டும். 108 இடங்களில் வெற்றி பெற்று 1 இடத்தில் விஜய் ராஜினாமா செய்தார். தவெக கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 106 தான். அதிமுக உறுப்பினர்களால் தான் இந்த 144 வந்துள்ளது 34% வாக்கு தான் தவெக பெற்றுள்ளது. 66% மக்கள் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
