- உதயச்சந்திரன்
- தொழில்துறை முதலீட்டுக் கழகம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- தரேஷ் அகமது
- கெய்டன்ஸ் தமிழ்நாடு
- பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்…
சென்னை: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை: கெய்டென்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்த தாரேஷ் அகமது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைத் செயலாளராகவும், முன்னாள் முதல்வரின் 3வது தனிச்செயலாளராக இருந்த அனு ஜார்ஜ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராகவும், தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையில் சிறப்பு செயலாளராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைச் செயலாளராகவும், நிதித்துறை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கூடுதல் தலைமை செயலாளர், தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராகவும், தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக இருந்த குமார் ஜெயந்த் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் கூடுதல் தலைமை செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
