×

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி: எண்ணூரில் பரிதாபம்

எண்ணூர்: நண்பருடன் கடலில் குளித்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். சென்னை மணலி கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் 11ம் படித்து வந்தார். நண்பர் யுவராஜ் (19) உட்பட 4 பேருடன் நேற்று மாலை எண்ணூர் பெரியகுப்பம் கடலில் குளித்துள்ளார். அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் இருவரும் சிக்கி மாயமானார்கள். நண்பர்கள் கூச்சல் போட்டதால் அங்கு இருந்த மீனவர்கள் ஓடிவந்து விசாரித்தனர். பின்னர் உடனடியாக கடலில் இறங்கி தத்தளித்த யுவராஜை மீட்டு கொண்டுவந்தனர். ஆனால் ஜீவானந்தம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எண்ணூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையில் வீரர்கள் வந்து மிதவைகளை பயன்படுத்தி மாயமான சிறுவனை தேடியபோதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்றிரவு அதே பகுதியில் மாணவன் ஜீவானந்தம் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுசம்பந்தமாக எண்ணூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Tags : waves ,Ennore ,Jeevanandam ,Chennai ,Karunanidhi ,Nagar ,Periyakuppam ,Yuvaraj ,
× RELATED நாடு முழுவதும் பால் விலையை...