×

திருவொற்றியூரில் காயத்துடன் மயில் மீட்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் ஒரு வீட்டில் காயத்துடன் கிடந்த பெண் மயிலை வனத்துறையினர் மீட்டனர். சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை அய்யாபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ப்ரித்தி. இவர் தனது வீட்டுவாசலில் நின்றுகொண்டிருந்தபோது ஒரு மயில் பறந்துவந்து தஞ்சமடைந்துள்ளது.

உடனடியாக அவர் வேளச்சேரி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து வனத்துறை காவலர் ஜெய் வினோத் வந்து மயிலை பிடித்தபோது அது அடிப்பட்டு நகரமுடியாத நிலையில் அமர்ந்திருந்தது. அது பெண் மயில் என்பதும் தெரிந்தது. அந்த மயிலை மீட்டு சிகிச்சைக்காக வேளச்சேரி வனத்துறை மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Thiruvotriyur ,Prithi ,Kaladippettai Ayyapillai Thottam ,Thiruvotriyur, Chennai ,Velachery Forest Department… ,
× RELATED நாடு முழுவதும் பால் விலையை...