×

காரைக்குடியில் பரபரப்பு: நாதக மாநில நிர்வாகி திடீர் தற்கொலை

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சத்யா நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (31). நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பொறியாளரான பிரபாகரன், கட்டிடம் கட்டிக்கொடுக்கும் பணி செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 வயதில் மகன் உள்ளனர். இந்நிலையில் பிரபாகரன் நேற்று தனது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகலவறிந்து காரைக்குடி தெற்கு போலீசார் வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த மனவருத்தம் காரணமாக தற்கொலை செய்தாரா அல்லது குடும்ப பிரச்னை, கடன் பிரச்னை காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Karaikudi ,Prabhakaran ,Sathya Nagar, Karaikudi, Sivaganga district ,Naam Tamilar Katchi ,camp ,
× RELATED தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த...