வருவாய்த்துறை ஆணையராக முருகானந்தம் நியமனம்: நிதித்துறை செயலாளராக சித்திக் நியமனம்

சென்னை: தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை:
நில நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த அமுதா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பிய முன்னாள் தலைமை செயலாளர் முருகானந்தம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராகவும் , நிதித்துறை செயலாளர் உதயசந்திரனுக்கு பதிலாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த எம்.ஏ.சித்திக் நிதித்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராஷ்டிரிய உச்சதர் சிக்ஷா அபியான் திட்ட இயக்குநர் எஸ்.ஸ்வர்ணா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் மணிவாசனிடமிருந்து இப்பொறுப்பை அவர் ஏற்பார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகப் பணியாற்றி வந்த நந்தகுமார், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிறிஸ்துராஜ் ஐஏஎஸ்சுக்கு பதிலாக இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நந்தகுமார் ஐஏஎஸ் அயற்பணி தொடர்பான நிபந்தனைகள் 1994ம் ஆண்டின் அரசாணை விதிகளின்படி அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: