சென்னை: தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது அட்வகேட் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். பின்னர் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். சுமார் 3 ஆண்டுகள் பி.எஸ்.ராமன் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தார்.
இநநிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பினார். புதிய அட்வகேட் ஜெனரல் இன்னும் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. தற்போது இந்த பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஐந்து மூத்த வழக்கறிஞர்கள் இந்த பதவியை எதிர்பார்த்துள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதேபோல், முக்கிய பதவிகளான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அரசு பிளீடர் பதவிகளுக்கும் விரைவில் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
