மும்பை: 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் 11 போட்டியில் 3ல் மட்டுமே வென்று 9வது இடத்தில் உள்ளதுடன் பிளே ஆப் வாய்ப்பையும் இழந்தது. தொடர் தோல்விகளால் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி 3 போட்டியிலும் ஆடவில்லை. பாண்டியாவுக்கு உண்மையில் காயம் எதுவும் இல்லை. ஆனால் புதிய வீரர்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக மும்பை, அவரை அணியில் சேர்க்கவில்லை. அடுத்த சீசனில் அவரை அணியிலிருந்து விடுவிக்க திட்டமிட்டுள்ளனர். சூர்யகுமார் அல்லது திலக் வர்மாவை அடுத்த கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது.
இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பாலோ அப்பில் இருந்து ஹர்திக் பாண்டியா, அவரின் காதலி மஹேகா ஷர்மா ஆகியோர் விலகினர். இதனால் சர்ச்சையான நிலையில் மீண்டும் பாலோஅப்பில் பாண்டியா மட்டும் இணைந்தார். இருப்பினும், மும்பை அணியுடனான தனது கடந்தகால பதிவுகள் அனைத்தையும் நீக்கியுள்ளார். கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் மும்பை அணியில் இருந்து அவர் வெளியேற முடிவு செய்துள்ளார். அடுத்த ஆண்டில் மெகா ஏலத்தில் பாண்டியா இடம்பெறக்கூடும் என தெரிகிறது.
