வாகனங்களை மறித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்து தவெகவினர் அட்டூழியம்.!!

சென்னை: மாதவரம் அருகே சாலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களை அச்சுறுத்தியதோடு முன்னாள் திமுக ஊராட்சி செயலாளர் அலுவலகத்தை சேதப்படுத்தி த.வெ .க – வினர் அட்டுழியத்தில் ஈடுபட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது. கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் த.வெ.க – வினர் அட்டகாசம் செய்தனர்.

இந்த நிலையில் மாதவரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அலமாதி பகுதியில் உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் த.வெ.க – வினர் பட்டாசு வெடித்தனர். ஆபத்தான முறையில் பட்டாசுகளை கையில் வைத்து சுற்றி சாலை தடுப்பு சுவர்கள் மீது எறிந்து அட்டுழியத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள திமுக ஊராட்சி செயலாளர் தமிழ்வாணன் அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் தமிழ்வாணன் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: