அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை.!! போலீசார் விசாரணை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் தேத்தாக்குடியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் நிஷா (18). இவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாபல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி வேளாண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விடுதியில் தங்கிப் படித்து வந்த நிஷா திடீரென தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நிஷா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: