- சோழவந்தான்
- சட்டமன்ற உறுப்பினர்
- கருப்பையா
- சபாநாயகர்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- சென்னை
- விஜய்
- முதல் அமைச்சர்
- என் ஆனந்த்
- ஆதவ் அர்ஜுனா
- அருண்ராஜ்
சென்னை: தமிழக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் புதிய எம்எல்ஏக்களுக்கு இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். முதல்வராக விஜய் நேற்று பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சென்னை தலைமை செயலகத்திற்கு முதல்வர் விஜய் வந்தார். முதல்வர் விஜய்க்கு காவல்துறை சார்பில் மரியாதையை செலுத்தப்பட்டது. அதனை விஜய் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து முதல்வர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். சோழவந்தான் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடக்கிறது. விழாவில் முதல்வர் விஜய் உள்பட அனைத்து எம்எல்ஏக்களுக்களுக்கும், தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிராமணம் செய்து வைப்பார். கருப்பையா 2011-16ல் அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெகவில் இணைந்து போட்டியிட்டு வென்றார். முன்னதாக நேற்று மாலை தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழா சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் நடந்தது. அங்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில், முதல்வர் விஜய் முன்னிலையில் தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்று கொண்டார். இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

