சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செவலூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (28). இவர் 2 தினங்களுக்கு முன்பு சிவகாசி அருகே உள்ள கொத்தனேரி கண்மாய் பகுதியில் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து செவலூரை சேர்ந்த கில்லாடி சுரேஷ் (46), மதுரை விளாங்குடியை சேர்ந்த விக்னேஷ் (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், ‘‘கைதான கில்லாடி சுரேஷின் 17 வயது மகளை பிரபாகரன் காதலித்துள்ளார். இதனால் அவரை மது அருந்த அழைத்துச் சென்று கில்லாடி சுரேஷ் கொலை செய்துள்ளார். இதேபோல் சிவகாசி அருகே புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசனும் (26) தனது மகளை காதலித்ததால் கடந்த செப்டம்பர் மாதம் கில்லாடி சுரேஷ் தனது மகனுடன் சேர்ந்து கொலை செய்தார். கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் இருந்தபோது விக்னேசுடன் பழக்கம் ஏற்பட்டு பிரபாகரன் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார்’’ என்றனர்.
