எஸ்பி அலுவலகத்தில் பெண் கண்ணீர் மனு

 

வேலூர், மே 9:சீட்டு முடிவுக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்தும் சீட்டுத்தொகை ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை தராமல் இழுத்தடித்து வருவதாகவும், சீட்டுப்பணத்தை மீட்டுத்தரும்படியும் கேட்டு வேலூர் பாகாயத்தை சேர்ந்த பெண் எஸ்பி அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.வேலூர் பாகாயம் சஞ்சீவிராயபுரம் சத்யா நகரை சேர்ந்த விதவை பெண் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று கண்ணீருடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கணவரை இழந்த நான் தற்போது கட்டிட சித்தாள் வேலைக்கு ெசன்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். என் மகன்களும் கூலி வேலை செய்து வருகின்றனர். நான் இடையன்சாத்து பகுதியை சேர்ந்த சீட்டு நடத்துபவரிடம் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 2 சீட்டுகள் கட்டி வந்தேன். என் மகளின் திருமணம் முடிவானதால், சீட்டு முடிந்த நிலையில் எனக்கு தர வேண்டிய சீட்டுப்பணம் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை சீட்டு நடத்தியவரிடம் கேட்டேன்.

Related Stories: