ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு பயிற்சி

வருசநாடு, மார்ச் 1: வருசநாடு அருகே உள்ள தும்மக்குண்டு, வாலிப்பாறை, சீலமுத்தையாபுரம், முருக்கோடை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ‘ரேக்ளா ரேஸ்’ மாடுகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாடுகளுக்கு பேரீச்சம்பழம், பால், கம்பு, கரும்பு, நாட்டு வெல்லம், பருத்தி பிண்ணாக்கு, கொள்ளுப் பயறு உள்ளிட்ட தானிய வகைகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், வெளியூர்களைச் சேர்ந்த மொத்த, சில்லறை வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்து செல்கின்றனர்.

Related Stories: