100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

 

கீவ்: நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா 100-க்கும் மேற்பட்ட டிரோன்களால் தாக்குதல் நடத்தி உள்ளது. அவற்றுடன் ஏவுகணைகள் மூலமும் தாக்கியுள்ளது.

2ம் உலக போர் வெற்றி தின நினைவு கொண்டாட்டங்களை முன்னிட்டு போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா தயாராகி வருகிறது. இந்த சூழலில், ரஷ்யா தாக்குதலை நடத்தி உள்ளது. இதில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிமக்களின் வீடுகள், எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் தொழிற்சாலை தளங்கள் மீதும் தாக்குதல் பரவலாக நடந்துள்ளது. இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா, டோனெட்ஸ்க், கார்கீவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் பொல்தவா ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியுள்ளன. போர் தற்காலிக நிறுத்தம் என ரஷ்யா அறிவித்து விட்டு இந்த தாக்குதலை நடத்துவது அதன் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு செயலையே பிரதிபலிக்கிறது’ என்றார்.

Related Stories: