ஒரே இடத்தில் 100+ பனிப்பாறைகள்: கனடாவின் ‘ஐஸ்பெர்க் ஆலி’-யில் படை எடுக்கும் பனி மலைகள்

கனடா: கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் (newfoundland) கடற்கரையோரம் அமைந்துள்ள ஐஸ்பெர்க் ஆலி (Iceberg Alley) பகுதிக்கு இந்த ஆண்டில் முதல் பனிபாறைகள் வர தொடங்கியுள்ளன. 10 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த பிரமாண்ட பனிப்பாறைகளுக்கான தற்போது சுற்றுலா பயணிகள் கூவிய தொடங்கினர். பொதுவாக கோடைகாலத்தின் தொடக்கத்தில் தென்படும் பனிப்பாறைகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே வரத்தொடங்கியது ஆய்வாளர்களின் இடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

2026 ஆண்டின் பருவம் கடந்த ஆண்டுகளை விட அதிக எண்ணிக்கையிலான பனிப்பாறைகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா நாட்டின் வானிலை மற்றும் சுற்றுசூழல்துறை இந்த மே 5 தேதி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி சுமார் 100க்கும் அதிகமான பிரம்மாண்ட பனிப்பாறைகள் வடக்கு கடற்கரை பகுதியில் மிதந்து கொண்டிருக்கின்றன.

மே மாதம் இறுதி மற்றும் ஜூன் மாதம் தொடக்கமே இந்த பனிப்பாறைகளை மிக அருகில் காண்பதற்கான உகந்த நேரமாக கருதப்படுகிறது. தற்போது நியூஃபவுண்ட்லேண்ட் (newfoundland) மாகாணத்தில் உள்ள செயின்ட் அந்தோனி (St. Anthony) பகுதியில் அதிகப்படியான பனிப்பாறைகள் காணப்படுகின்றன. இது ஜூன் 5 முதல் 14 வரை பனிப்பாறை திருவிழா நடைபெறவுள்ளது. அதேபோல் ட்வில்லிங்கேட் (Twillingate) மற்றும் போனாவிஸ்டா (Bonavista) பகுதிகளில் பல ராட்சத பனிப்பாறைகள் கடற்கரைக்கு மிக அருகியிலேயே நிலைகொண்டுள்ளன.

செயின்ட் ஜார்ஜ் (St. George’s) பகுதியில் நிலப்பரப்பிலிருந்து தெளிவாக பார்க்கும் வகையில் பல பனிப்பாறைகள் நகர்ந்து வருகின்றன. பனிப்பாறை பருவத்தை முன்னிட்டு செயின்ட் ஜார்ஜ் (St. George’s) பகுதியில் ஆண்டுதோறும் நடத்தபடும் புகழ்பெற்ற ஐஸ்பெர்க் ஆலி (Iceberg Alley) இசை திருவிழா தவிர்க்க முடியாத காரணங்களால் 2026 ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிய அளவிலான கலாச்சார நிகழ்ச்சிகள் JAG சவுண்ட்ஹவுஸ் (JAG Soundhouse) போன்ற இடங்களில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்பாறைகளின் நகர்வுகளை தெரிந்துகொள்ள IcebergFinder.com இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: