மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

தேவதானப்பட்டி, மே 6: தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் குடிநீருக்காக மஞ்சளாறு அணையில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் மஞ்சளாற்றங்கரையோர ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலபட்டி, வத்தலக்குண்டு, சிவஞானபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப்பணித்துறை சார்பாக விடப்பட்டது. இந்நிலையில் மஞ்சளாறு அணையில் இருந்து இரண்டு மாவட்ட மக்களுக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது.

 

 

Related Stories: