கோவில்பட்டியில் ரூ.9 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி, பிப். 26:  கோவில்பட்டி பகுதியில் ரூ.9 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி ஒன்றியம் வடக்கு திட்டங்குளம், ஆவல்நத்தம் பகுதியில் மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார். தொடர்ந்து அவர், வடக்கு திட்டங்குளத்தில் ரூ.4.5 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, மூப்பன்பட்டியில் ரூ.4.5 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நகரும் நியாய விலைக்கடையினையும் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்.தலைவர் சத்யா, மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி, துணைத்தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, மாவட்ட விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி, துணைச்செயலாளர் மாரியப்பன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ்பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சுப்புராஜ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணி செயலாளர் சவுந்தரராஜன், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மாணவரணி செயலாளர் விநாயகா முருகன், எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் சீனிராஜ், ஒன்றிய கவுன்சிலர் சண்முககனி இந்திரன், மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் இந்திரன், மகளிரணி ஜெயந்தி சரவணசாமி, செல்வி சுப்புராஜ், மணிமேகலை, தங்கமாரி, வசந்தா மற்றும் பாபு, ஆபிரகாம் அய்யாத்துரை, அருணாசலசாமி, போடுசாமி, வேலுமணி, ராசையா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>