காப்பீடு துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீடு

புதுடெல்லி: காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கும் காப்பீட்டு சட்ட திருத்த மசோதா கடந்த டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளில் தேவையான திருத்தம் செய்து ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி, காப்பீடு நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகு நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அரசின் ஒப்புதலின்றி தானியங்கி முறையில் அனுமதிக்கப்படும். எல்ஐசியில் மட்டும் இந்த வரம்பு 20 சதவீதமாக இருக்கும் என்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட திருத்த விதிகள் குறிப்பிடுகின்றன.

Related Stories: