சென்னை: சென்னை மாதவரம் 200 அடி சாலையில் கண்டெய்னர் லாரியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கண்டெய்னர் லாரி மோதியதில் உயிரிழந்தனர். அம்பத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன்(42), பிரேமலதா(36), மகன் இன்ப செல்வன்(8) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
