சன்ரைசர்ஸ் அணியில் தமிழக வீரர் அம்பரீஷ்

புதுடெல்லி: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்று காயமடைந்த வீரர் சிவம் மாவிக்கு மாற்றாக, தமிழ்நாட்டை சேர்ந்த ஆர்.எஸ் அம்பரீஷ் (18) சேர்க்கப்பட்டுள்ளார். மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசைர்ஸ் அணிக்காக அம்பரீஷ் ஆடுவார் என ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு துவக்கத்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியில் ஆல் ரவுண்டராக அம்பரீஷ் இடம் பெற்றிருந்தார். அந்த போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய அம்பரீஷ், தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அரங்கேற்றினார். வலது கை மித வேகப்பந்து வீச்சாளராகவும், இடது கை பேட்டராகவும் திகழும் அம்பரீஷ், ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: