ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘கிளாடியேட்டர்ஸ்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: அஜித் குமார் தனது 55வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார். இதையொட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அவரது அடுத்த படத்துக்கான பர்ஸ்ட் லுக் வீடியோவை நேற்றிரவு வெளியிட்டார். தற்போது கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கி துபாய், பெல்ஜியம் உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்று பரிசுகள் வென்றார். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக அஜித் குமார் பங்கேற்று வரும் கார் பந்தயங்கள், அதில் செய்த சாதனைகள் போன்றவற்றை இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆவணப்படுத்தி வந்தார். தற்போது அதை முழுநீள திரைப்படமாக்கி, ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற பெயரில் திரைக்கு கொண்டு வருகின்றனர். அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் எல்எல்சி வழங்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவில் அஜித் குமாரின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணங்கள், அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் டீசர் வெளியாகி இருந்தது.

Related Stories: